உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வண்டல் மண் பெயரில் செம்மண் கொள்ளை விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

வண்டல் மண் பெயரில் செம்மண் கொள்ளை விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

கோவை;வண்டல் மண் என்ற பெயரில், செம்மண் கடத்துவதை தடுக்க வலியுறுத்தி,தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்பழனிசாமி தலைமையில் விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கதலைவர் பழனிசாமி கூறியதாவது:தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க,தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் என்ற போர்வையில், மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் இருந்துசெம்மண் கடத்தி யூனிட் ஒன்றுக்கு, 500 முதல் 2,000 ரூபாய் வரை விற்கின்றனர்.தமிழக அரசு, இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களையும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். இதுபோன்று மண் எடுத்து தனது தோட்டத்தில் வைத்ததாக, விவசாயி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.தமிழக அரசு அறிவித்துள்ள வண்டல் மண் எடுக்கும் திட்டம், முறையாக விவசாயிகளை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ