உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை சிட்ராவில்மக்கள் மருந்தகம் திறப்பு

கோவை சிட்ராவில்மக்கள் மருந்தகம் திறப்பு

கோவை;மத்திய அரசின் 'மக்கள் மருந்தகம்', கோவை சிட்ராவில் திறக்கப்பட்டது.மக்களுக்கு மலிவான விலையில், தரமான மருந்துகளை விற்பனை செய்ய, மத்திய அரசின் திட்டமான 'மக்கள் மருந்தகம்' வரவேற்பு பெற்றுள்ளது. வரும் 2026 மார்ச் மாதத்துக்குள், 25 ஆயிரம் மக்கள் மருந்தகங்களை திறக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.இதன் ஒரு கட்டமாக, கோவை சிட்ரா பகுதியில், நேற்று திறக்கப்பட்டது. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை, டாக்டர்கள் சுவாமி நாதன், கலாநிதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா கவுதமன், மாவட்ட முன்னாள் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மோகன் மந்த்ராசலம், கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.மக்கள் மருந்தகத்தில், 30 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியில் மருந்துகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !