உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்பாண்டம் உற்பத்தி கூடம் திறப்பு விழா

மண்பாண்டம் உற்பத்தி கூடம் திறப்பு விழா

அன்னுார்:வடவள்ளி ஊராட்சி, முகாசி செம்சம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கடந்தாண்டு மண்பாண்டம் உற்பத்தி செய்யும் பணி கூடம் அமைக்க 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் முடிவடைந்து நேற்று மண்பாண்டம் உற்பத்தி கூடம் திறந்து வைக்கப்பட்டது.சுய உதவிக் குழு கூட்டமைப்பு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உற்பத்திக் கூடத்தில் மண் பானைகள், மண் குதிரை உள்ளிட்ட மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. உற்பத்திக் கூடத்தை ஊராட்சி தலைவர் செல்வி திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். நிதி ஒதுக்கியதற்கு அரசுக்கு சுய உதவி குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ