உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய விளையாட்டு போட்டிகள் துவக்கம் 

குறுமைய விளையாட்டு போட்டிகள் துவக்கம் 

கோவை;பள்ளி மாணவர்களுக்கான குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின. பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவ - மாணவியருக்கு குறுமையம், மாவட்டம், மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்தாண்டுக்கான குறுமைய அளவிலான போட்டிகள் நேற்று துவங்கின. நேற்று மேற்கு குறுமைய அளவிலான போட்டிகள் பாரதியார் பல்கலை வளாகத்திலும், புறநகர் குறுமைய போட்டிகள் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியிலும் நடந்தன. போட்டிகளை கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார்.மேற்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவியருக்கு தொண்டாமுத்துார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், கால்பந்து, கோ கோ, வாலிபால், கபடி உள்ளிட்ட 19 வகையான போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ - மாணவியர் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ