உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை நடைமேம்பாலம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சாலை நடைமேம்பாலம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை;பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சாலை நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, மொபசல் பஸ் ஸ்டாண்ட்டுக்கு செல்ல பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ரோட்டை கடந்து செல்லமுடியாத சூழலே நிலவுகிறது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், முன்னர் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பாலம் கட்டும் போது இது அகற்றப்பட்டது.தற்போது பொதுமக்கள் ரோட்டை கடக்க மீண்டும் இதேபோல், உயர்மட்ட நடைமேம்பாலம் கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், அரசு மருத்துவமனை முன், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், லட்சுமி மில்ஸ், உக்கடம் பகுதிகளில் சாலை நடைமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை