உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்டெக் 2024 தொழில் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது

இன்டெக் 2024 தொழில் கண்காட்சி கோவை கொடிசியாவில் துவங்கியது

கோவை:'இன்டெக் 2024' சர்வதேச தொழில் கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. கொடிசியா நடத்தும் இந்த கண்காட்சி, 20வது பதிப்பு, 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.கண்காட்சியை இந்திய தொழில் வர்த்தக சபையின் தென் மண்டல தலைவர் நந்தினி துவக்கி வைத்தார். கொடிசியா தலைவர் திருஞானம், இன்டெக் 2024 சேர்மன் ராமச்சந்திரன் பங்கேற்றனர். காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. மதியம் 2:00 மணி வரை தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் பார்வையிடும் நேரமாகவும், மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.கண்காட்சியின் துவக்க விழாவில், விருந்தினராக பங்கேற்று பேசிய டி.வி.எஸ்., சப்ளை செயின் சொல்யூசன்ஸ் செயல் தலைவர் தினேஷ், ''உலக அளவில் இன்ஜினியரிங் தொழில்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் இன்ஜினியரிங் ஏற்றுமதி பங்கு உலக வர்த்தகத்தில் 4.6 சதவீதமாக உள்ளது. இது 10 சதவீதமாக உயர வாய்ப்புகள் உள்ளதால் இந்திய நிறுவனங்களுக்கு வளர்ச்சி இருக்கும்,'' என்றார்.

கண்காட்சியில் இன்று

டெக்சாஸ் நிறுவனத்தின் சார்பில், 'உலக உற்பத்தி தொகுப்பு தொலைநோக்கு 2030, கருத்தரங்கு நடக்கிறது. இன்று மாலை 4:45 மணி அளவில், கொடிசியா தொழில் காட்சி எப் அரங்கில் நடக்கிறது. நிகழ்ச்சியில், ரோல்ஸ்ராய் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் தலைவர் கிஷோர் ஜெயராமன் பேசுகிறார். பிரிசீசன் குழு தலைவர் பாலசுப்ரமணியன், அசோக் லேலாண்ட் வடிவமைப்பு துணைத் தலைவர் சத்தியசீலன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை திட்ட இயக்குனர் கார்த்திகேயன் ஏற்பாடு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ