உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடன் கொடுத்தவர்கள் மிரட்டல்; வாங்கியவர் போலீசில் புகார்

கடன் கொடுத்தவர்கள் மிரட்டல்; வாங்கியவர் போலீசில் புகார்

கோவை : குனியமுத்துார், குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர், ஹபிப் ரகுமான் பழைய இரும்பு (ஸ்கிராப்) தொழில் செய்து வந்தார். இதற்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தில் இரும்பு தொழில் மற்றும் பணத்தை வட்டிக்கு கொடுத்தும் வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், இவரது மனைவியும், நான்கு வயது மகளும் மரணம் அடைந்தனர். மன உளைச்சலில் இருந்த ஹபிப், கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் போனது. கடன் கொடுத்த நபர்கள், பணத்தை திருப்பிக்கேட்டு ஹபிப் மற்றும் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக, அவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.ஹபிப் ரகுமான் தெரிவிக்கையில், ''தொழில் செய்வதற்காக, 15 பேரிடம் சுமார் 3.5 கோடி ரூபாய் வரை பெற்றிருந்தேன். மூன்று ஆண்டுகளாக வட்டியும் செலுத்தி வந்தேன். மனைவி, மகள் இறந்த சோகத்தில் சரியாக வட்டி செலுத்த முடியவில்லை. பணம் கொடுத்தவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து, பெண்களிடம் அநாகரிகமாக நடந்தனர். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ