உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

அரசு விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

அன்னுார்:அன்னுார் அருகே சொக்கம்பாளையத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான மாணவ, மாணவியர் விடுதிகள் ஐந்து உள்ளன. இதில் நான்காம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்கள் இங்கு இலவசமாக தங்குவதற்கு விடுதி வசதி உள்ளது. விடுதியில் உள்ள மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிபாட்டி புத்தகம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு நான்கு ஜோடி சீருடை வழங்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குக்காக வாலிபால், பேட்மிட்டன், செஸ், கேரம் போர்டு ஆகியவையும் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் 'டிவி'யும் உள்ளன.எனவே விடுதியில் சேர்ந்து மாணவ, மாணவியர் பயன் பெறலாம். விடுதியில் சேர விரும்புவோர், பள்ளி மாணவரின் கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி, வருமானச் சான்று, ஆதார் அட்டை மாணவர் பெயரில் வங்கி கணக்கு விபரம், ரேஷன் கார்டு என அனைத்தும் இரண்டு செட் ஜெராக்ஸ் மற்றும் ஆறு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.'மேலும் விபரங்களுக்கு, 93605 99997, 88259 28277 என்னும் மொபைல் எண்களில் விடுதிக்காப்பாளரை தொடர்பு கொள்ளலாம்,' என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை