உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக மகிழ்ச்சி தருவது நட்பா, உறவா? அலசியது கோவை நகைச்சுவை சங்கம்

அதிக மகிழ்ச்சி தருவது நட்பா, உறவா? அலசியது கோவை நகைச்சுவை சங்கம்

போத்தனூர்;கோவை நகைச்சுவை சங்கம், கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில், நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. ஈச்சனாரியிலிருந்து செட்டிபாளையம் சாலை சந்திப்பிற்கு செல்லும் வழியிலுள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணா கல்வி குழும முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் தலைமை வகித்தார். சொல்வேந்தர் சுகிசிவம், 'அதிக மகிழ்ச்சி தருவது உறவே, நட்பே' எனும் தலைப்பிலான பட்டிமன்றத்திற்கு தலைமை வகித்து, துவக்கி வைத்தார். 'அதிக மகிழ்ச்சி தருவது உறவே' எனும் அணியில் புலவர் சண்முகவடிவேல், சாந்தாமணி, கவிஞர் அருள் பிரகாஷ் ஆகியோரும், 'நட்பே' எனும் அணியில் பேராசிரியர் ராமச்சந்திரன், எழிலரசி, கவிஞர் மோகனசுந்தரம் ஆகியோர் வாதங்களை எடுத்துரைத்தனர், முடிவில் சுகிசிவம், ''தாய், தந்தை உறவுக்கு ஈடு கிடையாது. நாம் பசியோடு இருந்தால் பதறுவது தாய். தனது மகன், மகள் கஷ்டப்பட்டால் தாங்காதவர் தந்தை. அதே வேளையில் பிரச்னை என்றால் தோள் கொடுத்து முன்நிற்பது நண்பனே. தனது குடும்ப உறவுகளிடம் சொல்ல தயங்கும் விஷயத்தை, நண்பன் மூலம் தெரியப்படுத்துவார். உறவு நட்பாவதும், நட்பு உறவாவதுமே, வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை தரும்,'' என தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை