| ADDED : ஜூன் 23, 2024 01:16 AM
கோவை:கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.அதன்படி, இன்று, 54 மி.மீ., நாளை 58 மி.மீ., 25ம் தேதி 34 மி.மீ., 26ல் 55 மி.மீ., மழை பதிவாக வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29--33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19--22 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்று மணிக்கு, 16--20 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஒருசில இடங்களில், கன மழை முதல் மிக கனமழை எதிர்பார்க்கப்படுவதால், எல்லா பயிர்களுக்கும் தகுந்த வடிகால் வசதி செய்ய வேண்டும். தக்காளி நடவு செய்ய இது சிறந்த தருணம். உள்ளூர் பகுதிகளில் அதிவேக காற்று, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, கரும்பில் எதிரெதிர் வரிசைகளை விட்டம் கட்டி, காற்றினால் சாயாமல் பாதுகாக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.