| ADDED : மே 30, 2024 12:00 AM
உடுமலை : உடுமலை ஜக்கம்மாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உடுமலை இந்திராநகரில் செல்வவிநாயகர், ஜக்கம்மாள், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண திருவிழாவையொட்டி, இன்று (30ம் தேதி) அம்மன் திருவீதி உலா நடக்கிறது.திருவிழாவில் நேற்றுமுன்தினம் திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க செல்லுதலும், இரவு கும்மியாட்டமும், தொடர்ந்து, 10:00 மணிக்கு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நடைபெற்றது. இன்று காலை, 10:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு, நாளை (31ல்), மகா அபிேஷகம், ஆராதனை நடக்கிறது.இதில், இந்திராநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.