| ADDED : ஜூலை 02, 2024 11:02 PM
கோவை:மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாவட்ட கிரிக்கெட் சங்கம், 'லட்சுமி கார்டு குளோத்தில் கோப்பைக்கான' முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில் ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜாலி ரோவர்ஸ் அணிக்கு முகேஷ், (43), செந்துார் (34) ஆகியோர் கைகொடுக்க, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. காஸ்மோ அணியின் ராஜாரவி வர்மா, நான்கு விக்கெட்கள் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய காஸ்மோ அணியின் வீரர்களை, ஜாலி ரோவர்ஸ் அணியின் விஜயராஜ் (3 விக்கெட்), தினேஷ் குமார் (3 விக்கெட்) எடுத்து மிரட்டினர். சிறப்பாக பந்து வீசிய, ஜாலி ரோவர்ஸ் அணியின், எதிரணியை 48.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினர். இதன்மூலம், ஜாலி ரோவர்ஸ் அணி, 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.