உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பங்களாவை காலி செய்தார் கல்பனா

பங்களாவை காலி செய்தார் கல்பனா

கோவை;கோவை மேயர் பதவியை, தி.மு.க., கவுன்சிலர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பங்களாவை காலி செய்து, மாநகராட்சி வசம் சாவியை நேற்று ஒப்படைத்தார்.கோவை மாநகராட்சி மேயராக இருந்தவர், 19வது வார்டு (தி.மு.க.,) கவுன்சிலர் கல்பனா. இவரது பயன்பாட்டுக்கு மாநகராட்சி சார்பில் 'இன்னோவா - கிரிஸ்டா' கார், ஒரு ஜீப், மைக் வழங்கப்பட்டிருந்தது. மேயர் குடும்பத்துடன் வசிக்க, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பங்களா ஒதுக்கப்பட்டது. மேயர் பதவியை அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கார், ஜீப் மற்றும் மைக் போன்றவை உடனடியாக திரும்ப பெறப்பட்டன. பங்களாவை காலி செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, சாவியை மாநகராட்சி அதிகாரிகளிடம் கல்பனா நேற்று ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை