உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கராத்தே, சிலம்பம் போட்டி; கோவை அணி வெற்றி

கராத்தே, சிலம்பம் போட்டி; கோவை அணி வெற்றி

கோவை : உலகக் கோப்பை கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றது.உலக கோப்பை, 6-வது கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி கேரளா பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.இதில் கோவை சேர்ந்த ரியோ மாஷியல் ஆர்ட்ஸ் அகாடமி அணியை சேர்ந்த சுமார், 20 பேர் உள்பட மொத்தம், 1500-க்கு மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். சிலம்பத்தில், 4பிரிவாகவும், கராத்தேவில், 3 பிரிவுகளாகவும் போட்டிகள் நடைபெற்றது.போட்டியில் ரியோ மாஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவ - மாணவிகள், 12 தங்கம் பதக்கம், 8 வெள்ளி பதக்கம், 4 வெண்கலம் என மொத்தம், 24 பதக்கங்களை குவித்தனர்.பதக்கங்களை வென்ற மாணவ- மாணவிகளுக்கு, தலைமை பயிற்சியாளர் நாகராஜா மற்றும் பயிற்சியாளர்கள் பிரசாந்த், நிஷாந்த பாபு, தரிசிகா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்