உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஸ்துாரி சீனிவாசன் நினைவு வினாடி - வினா போட்டி

கஸ்துாரி சீனிவாசன் நினைவு வினாடி - வினா போட்டி

கோவை: கோவை கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரி வெள்ளி விழா முன்னிட்டு, அறங்காவலர் கஸ்துாரி சீனிவாசன் நினைவாக தென் இந்திய அளவில் ஜவுளித்துறை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி, பீளமேட்டில் உள்ள ஆர்ட் கேலரி அரங்கில் நடந்தது. இந்த போட்டியில் பல மாநிலங்களில் இருந்து, 90 குழுக்களாக, 180 மாணவர்கள் பங்கேற்றனர்.இரண்டு பிரிவுகளாக நடந்த இந்த வினாடி வினா போட்டியில், கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் முதல் மற்றும் மூன்றாம் பரிசை வென்றனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த டி.கே.டி., இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் இரண்டாம் பரிசை வென்றனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த டி.கே.டி., பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசும், கேரள மாநிலம் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாம் பரிசும், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.,பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மூன்றாம் பரிசும் பெற்றனர். ஹைதராபாத் வின்சோல் ரெனிவப்பல் சொலியூஷன் நிர்வாக இயக்குனர் சேஷாகிரிராவ் மேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.கோவை பூர்ணிமா எண்டர்பிரைசஸ் நிறுவனர் ராமலிங்கம் கவுரவ விருந்தினராக பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை