உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறந்த மோதிர விருதை பெற்ற கீர்த்திலால்ஸ்

சிறந்த மோதிர விருதை பெற்ற கீர்த்திலால்ஸ்

கோவை : இந்தியாவின் முன்னணி வைர மற்றும் தங்க ஆபரண பிராண்டாக புகழ் பெற்றிருக்கும் கீர்த்திலால்ஸ், இந்த ஆண்டின் 'சிறந்த மோதிர விருது' பெற்றுள்ளது.மும்பையில் நடந்த ரீட்டெய்ல் ஜூவல்லர் இந்தியா அவார்ட்ஸ் நிகழ்வின் 19வது பதிப்பில், கீர்த்திலால்சின் வண்ண ரத்தினக்கல் பொருத்திய மோதிரத்திற்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.ஆபரணங்களை உருவாக்குவதில், புதுமையான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப யுக்திகளைப் பயன்படுத்துவதற்கு, கீர்த்திலால்ஸ்க்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.கீர்த்திலால்ஸ்சின் பிசினஸ் செயல் யுக்தி இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் பேசுகையில், ''நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆபரணத்திலும், கலை மற்றும் நேர்த்தி நிலையை உறுதி செய்கிறோம். இத்துறையில் புதிய போக்குகளை நிறுவும் விதத்தில், ஒவ்வொரு ஆபரணத்திலும் எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழுவினரின் திறனுக்கான அங்கீகாரமாக இவ்விருது கிடைத்திருக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை