உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளா கழிவு கொட்டி எரித்தவர்கள் கைது

கேரளா கழிவு கொட்டி எரித்தவர்கள் கைது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, தோட்டத்தில் கேரள மாநில கழிவுகளை கொட்டி எரித்தவர்களை, வடக்கிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, எஸ்.நாகூரில், கேரளாவில் இருந்து வாகனத்தில் கழிவுகளை கொண்டு வந்து ஜெகதீஸ்,40, என்பவரது தோட்டத்தில் கொட்டி எரிப்பதாக, வடக்கிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று, வாகன உரிமையாளர் முகமது ெஷரிப், 28, டிரைவர் ஷகிர்,40, ஜெகதீஸ்,40 ஆகியோரை கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'கடந்த ஏழு மாதங்களாக சரக்கு வாகனத்தில், கேரளா கழிவுகளை கொண்டு வந்து தோட்டத்தில் கொட்டி எரித்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போது, ஒயரின் மேற்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எரித்துக்கொண்டு இருந்தனர். அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி