உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யோகாவில் உலக சாதனை பள்ளி மாணவனுக்கு பாராட்டு

யோகாவில் உலக சாதனை பள்ளி மாணவனுக்கு பாராட்டு

சோமனூர்:யோகா செய்து உலக சாதனை படைத்த மாணவனுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.சோமனூர் அடுத்த கோம்பக்காடு புதூரை சேர்ந்த விக்னேஷ் குமார் -சண்முகபிரியா தம்பதி மகன் ஹரி நிதீஷ். சாமளாபுரம் லிட்ரஸி மிஷன் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு மாணவன். சமீபத்தில் சென்னையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த, கேலோ இந்தியா துவக்க விழா யோகா போட்டியில், 60 வினாடிகள் 'சின் ஸ்டாண்ட்' நிலையில் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார் ஹரி நிதீஷ். அதற்கான சான்றிதழ் மாணவனுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. உலக சாதனை புரிந்த மாணவனுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, அறங்காவலர் ரத்தினசாமி, கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் மனோகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ