உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

கோவை;கோவை, டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியின்தாளாளரும், தலைமை ஆசிரியருமான ஹென்றி டேனியலுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமை வகித்தார். புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியருமான ஹென்றி டேனியல், பணியாற்றிய அனைத்துப் பள்ளிகளையும் சார்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அவரிடம் பயின்ற மாணவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், கோவை மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் மரிய ஜோசப், வட்டார முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர், புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நல்லாயன் துவக்கப்பள்ளி ஆகியவற்றின் தாளாளர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ