உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குற்றச்செயல்களை தடுத்த போலீசாருக்கு பாராட்டு

குற்றச்செயல்களை தடுத்த போலீசாருக்கு பாராட்டு

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து மேற்கொண்டு, பல்வேறு குற்ற செயல்களை தடுத்த ரோந்து போலீசார்களை எஸ்.பி., பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.திருப்பூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், கூடுதல் ரோந்து பணி போலீசார் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றனர். இம்மாதத்தில் இரவு ரோந்துகளின் போது பல்லடம், உடுமலை, காங்கயம், ஊத்துக்குளி ஆகிய இடங்களில் ரோந்து போலீசார் மொபைல் போன் வழிப்பறி, டூவீலர் திருட்டு, வீட்டு பூட்டை உடைத்து திருடிய, ஏ.டி.எம்., மையத்தில் திருட முயன்ற நபர்களை பிடித்தனர்.சம்பந்தப்பட்ட ரோந்து போலீசாரை, திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை