உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாரியம்மன் கோவில் 19ல் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் 19ல் கும்பாபிஷேகம்

அன்னுார்;எல்லப்பாளையத்தில் உள்ள பழமையான மாரியம்மனுக்கு, புதிய கோவில் கட்ட ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர். இதையடுத்து சிவாகம முறைப்படி, கருவறை, ஐந்து நிலை கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா வருகிற 17ம் தேதி காலை விநாயகர் வேள்வியுடன் துவங்குகிறது. மாலையில் பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது.வரும் 18ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், விமான கோபுர கலசங்கள் நிறுவுதலும் நடக்கிறது. இரவு அனுப்பப்பட்டி பழனிச்சாமி வள்ளி முருகன் குழுவின் திருக்குறள் கும்மியாட்டம் நடக்கிறது. வரும் 19ம் தேதி அதிகாலையில் நான்காம் கால வேள்வி பூஜை நடக்கிறது.காலை 7:00 மணிக்கு மாகாளியம்மன் மற்றும் விமானத்திற்கும், இதையடுத்து மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. எல்லப்பாளையம் குழுவின் பஜனை நடக்கிறது. இரவு ஆசிரியர் கனகராஜின் சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம் நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை