| ADDED : ஆக 19, 2024 12:48 AM
அன்னூர்:குமாரபாளையம் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 23ம் தேதி நடக்கிறது. அன்னூர் அருகே குமாரபாளையம், அன்பு நகரில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக வடக்கு நோக்கி சன்னதியும், கருங்கல்லினால் கருவறையும் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம், முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளன. கொற்றவை, பாலமுருகப் பெருமான், நாகர் உடன் கன்னிமூல கணபதியும் நிறுவப்பட்டுள்ளன.கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி மாலை 3:00 மணிக்கு, தீர்த்தக்குட ஊர்வலத்துடன் துவங்குகிறது. இதை தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடும், முதற்கால வேள்வி பூஜையும், விமான கலசங்கள் நிறுவுதலும் நடக்கிறது.வரும் 23ம் தேதி காலை 7:15 மணிக்கு, விமானத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.