உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலம் ஒன்று; கடன் மூன்று கடன் வழங்கியவர் மீது வழக்கு

நிலம் ஒன்று; கடன் மூன்று கடன் வழங்கியவர் மீது வழக்கு

போத்தனுார்:கடன் வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வரதராஜபுரம் அருகேயுள்ள என்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் கருப்பையா, 42: மெஸ் உரிமையாளர். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இவர், தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து, கணபதியை சேர்ந்த ராஜகோபால் கருப்புசாமி என்பவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்றார். வட்டி, அசல் செலுத்த தாமதமானதால், ராஜ கோபால், வெங்கடேஷ் பிரசாத் என்பவரிடம் ரூ.20 லட்சத்திற்கு நிலத்தை அடமானம் வைத்தார்.தனக்கு வர வேண்டிய தொகை போக மீதியை, கருப்பையாவிடம் கொடுத்தார்.வெங்கடேஷ் பிரசாத்திற்கும், கருப்பையா வட்டி செலுத்தவில்லை. இந்நிலையில், அவர் பத்திரத்தை ராஜ்குமார், 33 என்பவரிடம் அடமானம் வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.இதையடுத்து கருப்பையா', ராஜ்குமாரிடம் சென்று, மொத்தமாக, 50 லட்சம் ரூபாய்க்கு பத்திரத்தை அடமானம் பெற்றுக்கொண்டு, தொகை கேட்டுள்ளார்.ராஜ்குமார் ஐந்து லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, 20 லட்சம் ரூபாயை பிறகு தருவதாக கூறியுள்ளார். ஆனால் தரவில்லை.சில நாட்களுக்கு முன், கருப்பையா தனது மெஸ் முன் நின்றிருந்தார். அங்கு வந்த ராஜ்குமார், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். கருப்பையா போத்தனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்