உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில் வக்கீல் பலி

விபத்தில் வக்கீல் பலி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, வக்கீல் இறந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சம்சுதீன், 50. இவரது மனைவி கீதா, 40, வக்கீல். இவர்கள் இருவரும், நேற்று முன்தினம், பொள்ளாச்சியில் இருந்து, கெட்டிமல்லன்புதுார் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, மீன்கரை ரோடு, மாட்டுச்சந்தை அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. விபத்தில், கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சம்சுதீனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி