உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி வெள்ளியில் அம்பாளையும் அம்மனையும் கொண்டாடுவோம்!

ஆடி வெள்ளியில் அம்பாளையும் அம்மனையும் கொண்டாடுவோம்!

கோவை:ஆடி முதல் வெள்ளி விழா அம்பாள் மற்றும் அம்மன் கோவில்களில் கோலாகலமாக நடந்தது. ஆடி முதல் வெள்ளியான நேற்று, வீடுகளில் பெண்கள் குத்துவிளக்கினை அலங்கரித்து, தீபத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து, லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தனர். குடும்ப மகிழ்ச்சிக்காக கன்யா பூஜை, ராகுகால பூஜை, நாகதோஷ பூஜைகளை செய்தனர். சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கை கொடுத்து உபசரித்தனர். அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை