உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடை மருந்தக டாக்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கால்நடை மருந்தக டாக்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவில்பாளையம், கால்நடை மருந்தகத்தில் பணிபுரியும் கால்நடை டாக்டர் அசோகனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை அறிவியல் தமிழ் இயக்கம் வாயிலாக 'கால்நடைகளின் நலம் விவசாயிகளின் வளம்' என்ற தலைப்பில் தேசிய அளவில் இரு நாள் கருத்தரங்கு நடந்தது.இதில், பொள்ளாச்சி கோவில்பாளையம், கால்நடை மருந்தகத்தில் பணிபுரியும் கால்நடை டாக்டர் அசோகனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பேராசிரியர் செல்வக்குமார், இந்த விருதை வழங்கினார்.கடந்த, 36 ஆண்டுகளாக டாக்டராக உள்ள இவர், கால்நடை வளர்ப்பு மற்றும் மேலாண்மை, சுனாமி மறுவாழ்வு திட்டம், இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, இளைஞர்களுக்கு, சுய உதவி குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியளித்துள்ளார்,மேலும், வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு, மகளிர் திட்டம் என, அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக, பணிபுரிந்துள்ளார். ஏற்கனவே, மாநில அளவில் விருதுகள் பெற்ற நிலையில் துறை ரீதியான அலுவலர்கள் பலரும் அவரை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி