உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டு எண்ணிக்கையன்றும் மதுபான விற்பனை ஜிவ்

ஓட்டு எண்ணிக்கையன்றும் மதுபான விற்பனை ஜிவ்

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், ஓட்டு எண்ணிக்கையையொட்டி, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பார்களில் மது விற்பனை படுஜோராக நடந்தது.தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.இருப்பினும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள, ஆலாந்துறை, பூலுவபட்டி, மாதம்பட்டி, காளம்பாளையம், பேரூர், வீரகேரளம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், கலிக்கநாயக்கன்பாளையம், வெள்ளெருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் பார் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக, மது விற்பனை படுஜோராக நடந்தது.குவார்ட்டருக்கு, 100 ரூபாய் அதிகம் விலை வைத்து விற்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையையொட்டி, பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தபோதும், சட்டவிரோத மது விற்பனையை கண்டுகொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி