உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாகாளியம்மன் கோவில் திருவிழா

மாகாளியம்மன் கோவில் திருவிழா

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி, பாலார்பதி கிராமத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 7ம் தேதி, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கடந்த, 9ம் தேதி, பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. வரும், 13ம் தேதி, காலை 7:00 மணிக்கு, விநாயகர் பொங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ம் தேதி, காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு தீர்த்தம் செலுத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, நகை எடுத்து செல்லுதல், இரவு 7:00 மணிக்கு, மாகாளியம்மனுக்கு சக்தி கலசம் முத்தரித்தல் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது.வரும், 15ம் தேதி, அதிகாலை, 3:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், காலை, 7:00 மணிக்கு கிடாய் வெட்டுதல், மதியம், 12:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.16ம் தேதி, காலை 11:00 மணிக்கு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, சக்தி கலசம் கங்கையில் செலுத்தப்படுகிறது. 17ம் தேதி, காலை 8:00 மணிக்கு, பழக்கூடை எடுத்தல், மதியம் 12:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ