உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பாலக்காடு;பாலக்காடு வில்லுாணி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.பாலக்காடு அருகே நடுப்புணி எருத்தேன்பதியை வில்லுாணியில், மாகாளியம்மன், மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன.இக்கோவிலில் செஞ்சேரிமலை நடராஜ சிவாச்சாரியார், கல்யாண சுப்பிரமணிய சிவம், ஆகியோர் தலைமையில் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று நடந்தன. காலை மங்கள இசை வாத்யத்துடன் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், நான்காம் கால யாகபூஜை, விஷேச பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து தீர்த்தகலசங்கள் எடுத்துவரப்பட்டு, கோவில் கோபுர விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மாலையில் தீபாராதனை விஷேச பூஜைகள் ஆகியவை நடந்தது. பின்னர் பல்லக்கில் அம்மன் வீதியுலாவும் செண்டை வாத்யத்துடன் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்