| ADDED : மே 16, 2024 05:50 AM
தொண்டாமுத்தூர் : காளம்பாளையத்தில், காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தது.தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, விவசாயி. இவர், தனக்கு சொந்தமான நிலத்தில், 1½ ஏக்கரில் மக்காச்சோளமும், ½ ஏக்கரில் வெண்டையும் சாகுபடி செய்து இருந்தார். மக்காச்சோளம் கருதுகள், முதிர்ச்சி அடைந்து, 10 நாட்களில் பறிப்புக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று அதிகாலை, விளைநிலத்தில் புகுந்த காட்டுப்பன்றி கூட்டம், மக்காச்சோளம் கருதுகள் மற்றும் வெண்டை செடியை சேதப்படுத்தி சென்றுள்ளது.இதுகுறித்து விவசாயி வேலுச்சாமி கூறுகையில்,மக்காச்சோளம் கருதுகள் நல்ல விளைச்சல் வந்து, பறிப்பிற்கு தயாராக இருந்தது. இந்நிலையில், காட்டுப்பன்றிகள் கூட்டம் விளைநிலத்தில் புகுந்து, கருதுகளை உண்டும், ½ ஏக்கருக்கு சேதப்படுத்தியும் சென்றுள்ளது. அதோடு, வெண்டை செடியையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால், முற்றும் நஷ்டமடைந்துள்ளது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.