உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த நபர்: போலீசார் விசாரணை

சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த நபர்: போலீசார் விசாரணை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே போடிபாளையத்தில், சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்த நபர் குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம், ஜமீன் ஊத்துக்குளி பகுதியில், 45 - 50 வயதுடைய ஆண், கடந்த சில மாதங்களாக சுற்றி திரிந்து வந்தார். இந்நிலையில், அந்த நபர் நேற்றுமுன்தினம் நஞ்சேகவுண்டன்புதுார் பிரிவு பாலத்தின் பின்புறம் உள்ள சாக்கடையில் விழுந்து இறந்த நிலையில் கிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார், அடையாளம் தெரியாத நபர் உடல் மீட்கப்பட்டு, தனியார் ஆம்புலன்ஸ் வாயிலாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி