உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிர்வாக சவால்கள் சிறப்பு கருத்தரங்கு

நிர்வாக சவால்கள் சிறப்பு கருத்தரங்கு

கோவை;சென்னை வர்த்தக மையத்தில் சமீபத்தில் நடந்த மருத்துவ கண்காட்சியில், கொங்குநாடு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் பங்கேற்றார்.அவர், 'மருத்துவமனை நிர்வாகத்தை முதல் தலைமுறையிலிருந்து, இரண்டாம் தலைமுறைக்கு மாற்றும்போது ஏற்படுகின்ற சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்றதலைப்பில் பேசினார்.அதில், முதலாவது தலைமுறையிலிருந்து இரண்டாவது தலைமுறைக்கு மருத்துவமனை நிர்வாகம் மாறும்போது, அதில் உள்ள சவால்களை பட்டியலிட்டு, அதற்கானதீர்வுகளையும் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.கருத்தரங்கு முடிவில், கேள்வி - பதில் நிகழ்வில், பல்வேறு கேள்விகளுக்கு பதில்களையும்வழங்கினார். மருத்துவமனை நிர்வாகிகள், நிர்வாக இயக்குனர்கள் பலர், டாக்டர் கார்த்திகேயனை பாராட்டி, வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை