| ADDED : ஜூலை 03, 2024 09:26 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில், கடந்த வாரத்தை விட தற்போது வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களை, தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த வாரம் வாழைத்தார் வரத்து சராசரியாகவும், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்த வாரம் செவ்வாழை கிலோ - 70, பூவன் - 32, நேந்திரன் - 65 , கதளி - 60, சாம்பிராணி வகை, 55 - 70; ரஸ்தாளி - 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது.இதில், இந்த வாரம் செவ்வாழை மற்றும் நேந்திரன் கிலோ - 5 ரூபாய், கதளி - 10, ரஸ்தாளி - 20 விலை அதிகரித்துள்ளது. மேலும், பூவன் வகை வாழை கிலோவுக்கு மூன்று ரூபாய் விலை சரிந்துள்ளது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது, கடந்த வாரம் இருந்த அதே அளவு வாழைத்தார் வரத்து இருந்தது. மேலும், வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றனர்.