உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

இன்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கருமத்தம்பட்டி;கிட்டாம்பாளையத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.சூலுார் வட்டாரத்தில், கால்நடைத்துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு போடும் பணி நடக்கிறது. கிட்டாம்பாளையம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.21ம் தேதி வடுகபாளையத்திலும், 23ம் தேதி குளத்துப்பாளையத்திலும், 25ம் தேதி வினோபா நகரிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. கால்நடை வைத்துள்ள விவசாயிகள் முகாமில் பங்கேற்று, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கால்நடைத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை