உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய ஸ்கேட்டிங் போட்டி ;கோவை சிறுமிக்கு பதக்கம்

தேசிய ஸ்கேட்டிங் போட்டி ;கோவை சிறுமிக்கு பதக்கம்

கோவை;சத்தீஸ்கர் மாநில ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 7வது தேசிய ரேங்கிங் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி ராய்ப்பூரில் நடந்தது. பல்வேறு வயது பிரிவுகளில் நடந்த போட்டியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில், மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதன் அடிப்படையில், கோவை பீபாள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தேஜாஸ்ரீ, 7 - 9 வயதுக்கு உட்பட்டோருக்கான இன்லைன் பிரிவில் பங்கேற்றார். திறமையாக செயல்பட்ட சிறுமி, வெண்கலம் வென்று அசத்தினார். பதக்கம் வென்ற மாணவியை, தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் சங்கர், தேசிய ஸ்கேட்டிங் நடுவர் சுகேஷினி ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை