உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.எம்.சி.எச்.,ல் நுண்ணுயிரிகள் தினம்

கே.எம்.சி.எச்.,ல் நுண்ணுயிரிகள் தினம்

கோவை:உலக நுண்ணியிரிகள் தினத்தை முன்னிட்டு, கே.எம்.சி.எச்., ஆராய்ச்சி கழகம் சார்பில், 2019ம் ஆண்டு முதல் வருடாந்திர உரை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.நடப்பாண்டுக்கான வருடாந்திர உரை நிகழ்ச்சியில், கொல்கத்தாவின் இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் புன்யஸ்லோக் பாதுாரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடல்வாழ் நுண்ணுயிர்கள் குறித்தும், உலகளாவிய சூழலியல் மாற்றம் குறித்தும், பசுமை இல்ல வாயுக்களை தரவரிசைப்படுத்துதல் மற்றும் புதிய கிருமிகள் உருவாக்கம் குறித்தும், விரிவாக எடுத்துரைத்தார்.கே.எம்.சி.எச்., ஆராய்ச்சி கழகத்தின் தொலைநோக்கு குறித்தும், மனித உடலில் நுண்ணுயிர் செயல்பாடுகளில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் குறித்தும், கே.எம்.சி.எச்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லாபழனிசாமி பேசினார்.கே.எம்.சி.எச்., செயல் இயக்குனர் அருண், கே.எம்.சி.எச்., ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மோகன் ராஜ், டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன், டாக்டர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ