உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு வீரர்கள் நலனுக்கு மினி ஸ்டேடியம்! மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் அமைக்க எதிர்பார்ப்பு

விளையாட்டு வீரர்கள் நலனுக்கு மினி ஸ்டேடியம்! மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் அமைக்க எதிர்பார்ப்பு

கோவை:'விளையாட்டு வீரர்களின் நலனுக்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலாம்பூர் பகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும்' என, கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நேரத்தில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையம் பாட்டியாலாவின் கிளை பயிற்சி மையம் கோவையில் அமைக்கப்படும் என, கோவை லோக்சபா பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையும் தெரிவித்தார்.இந்த அறிவிப்புகள் விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைத்து, விளையாட்டு வீரர்களின் நலனுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிந்தடிக் ஓடுதளம்

சர்வதேச முன்னாள் தடகள வீரரும், தமிழக அரசின் தலைசிறந்த பயிற்சியாளர் விருது பெற்றவருமான நிஜாமுதீனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:தற்போது, கோவையில் இருக்கும் நேரு ஸ்டேடியத்தை நம்பித்தான் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உட்பட பகுதியில் உள்ள வீரர்கள் உள்ளனர். மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வாரத்தில் சில நாட்கள் இவர்கள் வரும் போது, அசவுகரியம் ஏற்படுகிறது.எனவே, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலாம்பூர் பகுதிகளில் 6 அல்லது 4 லேன் கொண்ட சிந்தடிக் ஓடுதளம் கொண்ட மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும். இப்படி அமைத்தால், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள சிறப்பாக இருக்கும்.வீரர் ஒருவர் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர், பயிற்சியின்போது எந்த இடத்தில் தவறு செய்கிறார் என்பதை கண்டறிய ஏதுவாக, கலந்துரையாடல் கூடம் இருக்க வேண்டும். அப்போது தான், அவர் தன் தவறை சரி செய்து, போட்டிகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். வீரர்களின் உடல் நலத்தை மேம்படுத்த, பிசியோ தெரபிஸ்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் மெடிசன் டாக்டர் கட்டாயம் இருக்க வேண்டும். வீரர்களுக்கு என, உடற்பயிற்சி கூடம் அவசியம். இவையெல்லாம் நிறைவேற்றினால், வீரர்களின் விளையாட்டு திறன் மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ