உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய இறகுபந்து போட்டி; வெற்றி பெற்றவர்கள் யார், யார்

குறுமைய இறகுபந்து போட்டி; வெற்றி பெற்றவர்கள் யார், யார்

கோவை : புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட, பள்ளி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டியில், சிறப்பாக விளையாடிய மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.புறநகர் குறுமையத் துக்கு உட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி, மதர்லேண்ட் பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது. போட்டியை, பள்ளி நிறுவனர் ஆசை தம்பி, தாளாளர் சீதா, முதல்வர் லதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதன் மாணவர்கள் பிரிவு இறகுப்பந்து போட்டி, நேற்று எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் நடந்தது. மாணவர்களுக்கு 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றி பெற்றவர்கள்

14 வயது பிரிவில், காந்தியடிகள் கல்வி நிறுவனம் பள்ளி சூர்யா முதலிடம், கீர்த்திமான் பள்ளி தீரன் இரண்டாமிடம்; 17 வயது பிரிவில், பாரதி மெட்ரிக்., பள்ளி சச்சின் முதலிடம், லிஸ்யூ பள்ளி விஷ்வாஸ் இரண்டாமிடம்; 19 வயது பிரிவில், லிஸ்யூ பள்ளி பிரணவ் முதலிடம், டி.ஏ., ராமலிங்க செட்டியார் பள்ளி சக்தி சூர்யா இரண்டாமிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், கோவை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை