மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
5 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
5 hour(s) ago
கோவை:“இத்தாலி மற்றும் இந்திய பிரதமர்களுக்கு இடையிலான பாசமிகு நட்புக்கு, நியூமராலஜிதான் காரணம்,” என, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.ஜி7 உச்சி மாநாடு இத்தாலியில் சமீபத்தில் நடந்தது. இதில், இத்தாலி பிரதமர் மெலோனி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் நட்பு பெரிய அளவில் பேசுபொருளானது.இந்தியா ஜி7 உறுப்பு நாடு அல்லாத நிலையிலும், இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அங்கு பிரதமர் மோடியின் மீது அனைத்து நாடுகளின் கவனமும் குவிந்திருந்தது. அமெரிக்க அதிபர் பிடேன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடனும் பிரதமர் மோடி பேசியது, பல நாடுகளின் புருவத்தையும் உயரச் செய்தது.முத்தாய்ப்பாக, இத்தாலி பிரதமர் மெலோனி, மோடியுடன் செல்பி எடுத்து, 'மெலோடி' எனக் குறிப்பிட்டு அந்தப் புகைப்படத்தை, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.இருவரும் மிகுந்த நட்புடன் அளவளாவியது, ஊடகங்களில் முக்கிய கவனம் பெற்றது.இந்த இருவரின் நட்புக்கு, நியூமரலாஜிதான் காரணம் என, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.,சேகர் கூறினார்.இதுகுறித்து சேகர் கூறியதாவது:இத்தாலி பிரதமரும், இந்திய பிரதமரும் ஜி7 மாநாட்டில் மிகுந்த பரிவோடு, பண்போடு, பாசத்தோடு பழகினர். அந்தக் காட்சிகள் நட்புக்கு இலக்கணமாகத் தெரிந்தன.மற்ற பிரதமர்களோடு மெலோனி அவ்வளவாக, அளவளாவவில்லை என்பதும் செய்தியானது. மோடி அப்படி என்ன மெலோனியைக் கவர்ந்தார். எண் கணிதப்படி, மெலோனி பிறந்த தேதி 6. கூட்டு எண் 4. பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தேதி 8. கூட்டு எண் 5.4, 8 நண்பர்கள். 5,6,8,4 ஆகிய எண்கள் உடன்பாடு கொண்ட எண்கள். இந்தவகையில் எண் கணிதப்படி இவர்கள், ஈர்ப்பு உள்ள நட்பாளர்கள் என்பது வெளிப்படையாக நிரூபணம் ஆனது.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago