உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடுகபாளையம் ரோட்டில் வாகன ஓட்டிகள் அவதி

வடுகபாளையம் ரோட்டில் வாகன ஓட்டிகள் அவதி

சூலுார்;கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ள பொத்தியாம்பாளையம் - வடுகபாளையம் ரோட்டில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அரசூர் ஊராட்சியை அடுத்து நாரணாபுரம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள பொத்தியாம்பாளையத்தில் இருந்து வடுகபாளையம் செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதால், சேதமடைந்து மேடு, பள்ளமாக மாறி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை