| ADDED : மே 18, 2024 11:33 PM
மேட்டுப்பாளையம்;குன்னூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால், ரயில் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையத்தில் இருந்து, தினமும் காலை, 7:10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில்இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, குன்னூர் மலைப்பகுதியில் கன மழை பெய்ததால், அடர்லி - ஹில்குரோவ் இடையே, மலை ரயில் பாதையில், பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையில் விழுந்துள்ள பாறைகளை, ரயில்வே ஊழியர்கள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் ௨௦ம் தேதி வரை ரயில் ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணியர், ஏமாற்றம் அடைந்தனர். டிக்கெட் கட்டணத்தை, ரயில்வே நிர்வாகம் பயணியருக்கு திருப்பி வழங்கியது.