உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீரை காய்ச்சி பருக நகராட்சி அட்வைஸ்

குடிநீரை காய்ச்சி பருக நகராட்சி அட்வைஸ்

வால்பாறை: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வால்பாறை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வால்பாறை நகர் பகுதியில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்வசிக்கின்றனர். இது தவிர, வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் அதிக அளவில் அமைந்துள்ளன.நகர் பகுதி மக்களுக்கு, எட்டு கி.மீ,, தொலைவில் உள்ள அக்காமலை தடுப்பணையில், மலைச்சரிவில் இயற்கையாக வரும் தண்ணீரை தேக்கி வைத்து, நகராட்சி சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், அக்காமலை தடுப்பணை கடந்த ஜூன் மாதம் இறுதியில் நிரம்பியது. கடந்த மூன்று மாதங்களாக, தடுப்பணை நிரம்பிய நிலையில் காணப்படுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பருவமழை தொடர்ந்து பெய்யும் நிலையில்,அக்காமலை தடுப்பணக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே இந்த ஆண்டு,குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவதோடு, குடிநீரை நன்றாக காய்ச்சிய பின் பருக வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ