உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நஞ்சுண்டாபுரம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்

நஞ்சுண்டாபுரம் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சிகளில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையில், தன்னிறைவு பெற்ற மற்றும் பார்வைக்கு தூய்மையாக விளங்கும் கிராம ஊராட்சிகளை, முன்மாதிரி ஊராட்சி என, அறிவிப்பதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு தலைவர் கார்த்திகேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். குருடம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ரவி தலைமை வகித்தார்.ஊராட்சிகளில், தூய்மை கிராமம் குறித்து சுவர் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பேனர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை பயன்படுத்த வலியுறுத்துதல், தூய்மையான முன்மாதிரி ஊராட்சியாக அறிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை