உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர தின விழாவையொட்டி பா.ஜ., தேசியக்கொடி ஊர்வலம் 

சுதந்திர தின விழாவையொட்டி பா.ஜ., தேசியக்கொடி ஊர்வலம் 

கோவை : சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில், நேற்று தேசிய கொடி ஊர்வலம் நடந்தது.கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில், ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள ஐயப்பா பூஜா சங்கத்திலிருந்து, தேசிய கொடிகளுடன் புறப்பட்ட பா.ஜ.,தொண்டர்கள், ராம்நகர் ராமர் கோவில், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தை கடந்து, சுபஸ்ரீ திருமண்டபத்துக்கு முன்பு ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.பா.ஜ.,சார்பில் திரளான தொண்டர்களும், அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும், ஊர்வலத்தில் பங்கேற்றனர்.பா.ஜ.,வினரின் குழந்தைகள் பாரதமாதா, பாரதியார், அழகுநாச்சியார், வ.உ.சி., சுபாஷ்சந்திரபோஸ் போன்று வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி