உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கடற்படை வீரர்கள்

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கடற்படை வீரர்கள்

கோவை;ஐ.என்.எஸ்., அக்ரானி கடற்படை வீரர்கள் வாலாங்குளம் உள்ளிட்ட இடங்களில் 'பிளாஸ்டிக்' கழிவுகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்., அக்ரானி கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என, 120 பேர் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி துாய்மை பணியில் ஈடுபட்டனர். வாலாங்குளக்கரையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியதுடன், ரேஸ்கோர்ஸ், கடற்படை வீரர்கள் குடியிருப்பு பகுதிகளில் குப்பையை அகற்றி துாய்மை செய்தனர். ஒருமுறை பயன்படுத்தி துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வகை பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை