| ADDED : ஏப் 17, 2024 01:59 AM
புதிய தொழில்நுட்ப பூங்கா
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:பொள்ளாச்சியில், நீதிமன்ற கட்டடத்துக்காக கூடுதல் நிதியாக, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழு கோடி ரூபாயில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. ஐந்து கோடி செலவில் விளையாட்டு அரங்கபணிகள் நடக்கிறது.வேர்வாடலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி அகற்ற, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் செவிலியர் பயிற்சி கல்லுாரி, புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும். தாராபுரம் ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். தொகுதியில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படும்.தி.மு.க., கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.