உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவன் கார் ஓட்டி விபத்து வடமாநில தொழிலாளி பலி

சிறுவன் கார் ஓட்டி விபத்து வடமாநில தொழிலாளி பலி

கோவை;பிளஸ் 2 மாணவன் ஒருவன் நள்ளிரவில் காரை எடுத்து சென்று விபத்தை ஏற்படுத்தியதில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.சவுரிபாளையம் மகாலட்சுமி கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்; இவரது 17 வயது மகன் பிளஸ் 2 படித்துவருகிறார். நேற்று முன்தினம் தாய், தந்தை துாங்கியவுடன் நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல் சிறுவன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துக்கொண்டு பீளமேடு நோக்கி சென்றார்.கால் டாக்ஸி ஒன்றை 'ஓவர் டேக்' செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அப்போது, அவிநாசி ரோடு மேம்பால பணியில்(துாண் எண்:136) ஈடுபட்டிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அக்ஷபெரா,23, மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.தடுப்பு சுவரின்மீது மோதிய காருக்குள் இருந்து வெளியே வரமுடியாது தவித்த சிறுவனை மேம்பால பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இரும்பு கம்பியால் காரின் கதவையும், கண்ணாடியையும் உடைத்து மீட்டனர். பின்னர் கார் திடீரென தீ பற்றி எரிந்தது.இதுதொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சிறுவன் மற்றும் அவனது தந்தை மோகன்ராஜ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ