உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் துவக்கி வைத்தும் ஒரு சொட்டு தண்ணீர் வரலை

முதல்வர் துவக்கி வைத்தும் ஒரு சொட்டு தண்ணீர் வரலை

அன்னூர்:முதல்வர் துவக்கி வைத்த பிறகும் அன்னூர் வட்டாரத்தில், ஒரு குளத்திற்கு கூட அத்திக்கடவு நீர் நேற்று வரவில்லை. எனினும் திட்டம் துவங்கியதற்கு, போராட்டக் குழு நன்றி தெரிவித்துள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள் 1,916 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று, காணொலி வாயிலாக இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த பிறகு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வினியோகம் ஆனது. ஆனால் ஐந்தாவது நீரேற்று நிலையத்துக்கு உட்பட்ட, அல்லப்பாளையம் ஊராட்சி மற்றும் ஆறாவது நீரேற்று நிலையத்திற்கு உட்பட்ட அன்னூர் ஒன்றியத்தில் உள்ள, 21 ஊராட்சிகளில் நேற்று தண்ணீர் வரவில்லை.திட்டம் துவங்கப்படும் தகவலை அடுத்து விவசாயிகள், பொதுமக்கள் குளங்களில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். எனினும் நேற்று மாலை 5:30 மணி வரை, அன்னூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் ஒரு குளத்திற்கு கூட தண்ணீர் வரவில்லை.இதுகுறித்து விவசாயிகள், அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஐந்தாவது நீரேற்று நிலையத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் சப்ளை ஆனவுடன், குளங்களுக்கு தண்ணீர் வரும்' என்றனர். இது குறித்து, அத்திக்கடவு திட்ட போராட்ட குழுவினர் கூறுகையில்,' 'தமிழக அரசு இந்த திட்டத்தை துவக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. 65 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்