உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோர்ட் கோடை விடுமுறையில் விசாரணை நாட்கள் அறிவிப்பு

கோர்ட் கோடை விடுமுறையில் விசாரணை நாட்கள் அறிவிப்பு

- நமது நிருபர் -கோர்ட் கோடைவிடுமுறை நாட்களில், ஜாமின் மற்றும் முன்ஜாமின் மனுக்கள் தாக்கல் மற்றும் விசாரணை நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கோடை காலத்தை முன்னிட்டு, மே 1 முதல் ஜூன் 2 வரை, கோர்ட்களுக்கு கோடை விடுமுறை அளித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பல்வேறு கோர்ட்கள் ஜூன் 2 வரை செயல்படாது.கோடை விடுமுறையில் பைலிங் மற்றும் விசாரணை நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கிரிமினல் வழக்குகளில், மே 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் முறையே, 10, 17, 24, மற்றும் 31 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும்.மே 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது முறையே, மே 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை