உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள், மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் விமலா, கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வாளர் சித்ரா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சலவநாயக்கன்பட்டி பொதுமக்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.நிரந்தர உண்டியல்களில், 56 லட்சத்து, 31 ஆயிரத்து, 955 ரூபாய்; தட்டுக்காணிக்கை உண்டியல்களில், 23 லட்சத்து, 17 ஆயிரத்து, 199 ரூபாய் காணிக்கை இருந்தது.மொத்தம், 79 லட்சத்து, 49 ஆயிரத்து, 154 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. மேலும், 130 கிராம் தங்கம், 179 கிராம் வெள்ளியும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை